டிரான்ஸ்பார்மர்ஸ் 4 விமர்சனம்

நடிகர் : மார்க் வால்பர்க்
நடிகை : நிக்கோலா பெல்ட்ஸ்
இயக்குனர் : மைக்கேல் பே
இசை : ஸ்டீவ் ஜெபலான்ஸ்கை
ஓளிப்பதிவு : அமீர் மோர்கி

மார்க் வால்பர்க் பழைய ஆட்டோ பார்ட்ஸ்களை வைத்து விஞ்ஞானம் செய்து வருகிறார். அந்த பொருட்களை வைத்து ரோபோ உள்பட பல பொருட்களை செய்து வருகிறார். மனைவியை இழந்த இவர் மகள் நிக்கோலா பெல்ட்சுடன் வாழ்ந்து வருகிறார். 

ஒருநாள் மார்க் வால்பர்க் ஒரு பழைய டிரக் வண்டியை தன் நண்பர் உதவியுடன் விலைக்கு வாங்கி வீட்டிற்கு எடுத்து வருகிறார். அந்த வண்டியில் உள்ள பார்ட்ஸ்களை சரி செய்து விற்றால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அதை சரி செய்கிறார். ஆனால் அந்த டிரக் உருமாறும் அதிசய வண்டி என்று அறிகிறார். இந்த தகவலை தன் நண்பருக்கும் மகளுக்கும் சொல்கிறார். ஆனால் அவர்கள் அதை தங்களிடம் வைக்கக்கூடாது என்று கூறியதுடன், உடனே போலீசிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றும் சொல்கிறார்கள். அந்த டிரக் திடீரென மிகப்பெரிய உருவமாக எழுந்து நின்று அவர்களிடம் என்னுடைய பெயர் ஆப்டிமஸ் பிரைம், நான் என்னுடைய சக ஆட்டோமேட்ஸ்கள் எல்லாம் பிரச்சனைகளில் உள்ளது நான் அங்கே செல்ல வேண்டும் என்று கூறுகிறது. அதற்கு மார்க் மறுப்பு தெரிவித்து உன்னுடைய பாகங்கள் எல்லாம் உடைந்து இருக்கிறது. நான் சரி செய்கிறேன் என்று கூறி ஆப்டிமசை இருக்க வைக்கிறார்.

இதற்கிடையில் மனித இனங்களை அழிக்க நினைக்கும் ஏலியன்சுகளுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு கெல்சே கிரம்மர் தலைமையில் மனித இனங்களை காப்பாற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்னும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய ஆட்டோமேட்ஸ்களை அழிக்கவும், அவர்களின் தலைவன் ஆப்டிமஸ் பிரைமையும் பிடித்துக் கொடுக்க திட்டம் தீட்டி அவர்களை தேடி அலைகிறார்கள். 

இந்நிலையில் ஆப்டிமஸ் தங்களிடம் இருப்பதாக மார்க்கின் நண்பர் கெல்சேவிடம் தகவலை அளித்து விடுகிறார். ஆதலால் ஆப்டிமசை தேடி ஒரு கும்பல் அவர்கள் வீட்டிற்கு வருகிறது. அங்கே நடக்கும் சண்டையில் நிக்கோலாவின் காதலர் ஜாக் மூலம் நிக்கோலாவும், மார்க்கும் தப்பித்து செல்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் சண்டையில் மார்க், நிக்கோலா மற்றும் ஜாக் ஆகியோரை ஆப்டிமஸ் காப்பாற்றுகிறது. இந்த போராட்டத்தில் மார்க் தன் நண்பரை இழந்து விடுகிறார்.

அதன்பின் எதற்காக அரசாங்கம் தங்களை அழிக்க திட்டம் போடுகிறது என்பதை அறிய ஆப்டிமஸ் முயற்சி செய்கிறது. அதற்கு உதவியாக மார்க், நிக்கோலா, ஜாக் ஆகியோரையும் தன் சக ஆட்டோமேட்ஸ்சையும் அழைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து சிகாகோ செல்கிறது. அங்கு ஸ்டான்லி என்பவர் கே.எஸ்.ஐ என்னும் நிறுவனத் தலைவர் தன் கம்பெனியில் மனிதர்கள் இயக்கக்கூடிய டிரான்ஸ்ஃபார்மர்களை உருவாக்கி வருகிறார் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.

மனிதர்கள் இயக்கக்கூடிய இயந்திரங்கள் இருக்கும்போது தன்னிச்சையாக இயங்கும் இயந்திரங்கள் நாட்டிற்கு தேவையில்லை என்ற காரணத்தால் தங்களை அழிக்க நினைக்கிறார்கள் என்று ஆப்டிமஸ் தெரிந்துக் கொள்கிறது. இதனால் அந்த நிறுவனத்தோடு சண்டைப் போடுகிறார்கள் ஆப்டிமஸ் டீம். இந்த சண்டையின் போது வேற்று கிரகத்தில் இருந்து ஏலியன்சும் ஆப்டிமசுக்கு எதிராக சண்டைப்போடுகிறது. இதில் ஆப்டிமசையும், நிக்கோலாவையும் அந்த ஏலியன்ஸ் வாகனத்தில் கடத்திச் சென்று விடுகிறது.

இறுதியில் நிக்கோலாவையும் ஆப்டிமசையும் மார்க் மற்றும் ஜாக் காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் மார்க் வால்பர்க் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏலியன்ஸ்களுடன் சண்டைப்போடும் போதும், தன் மகள் மீது பாசத்தைக் காட்டும்போதும் நடிப்பில் பளிச்சிடுகிறார். நிக்கோலா மற்றும் ஜாக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஸ்டீவ் ஜெபலான்ஸ்கையின் பின்னணி இசை சண்டைக்காட்சிகளில் அதிர வைக்கிறது. அமீர் மோர்கியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். அமெரிக்கா, சிகாகோ, சீனா உள்ளிட்ட நாடுகளை ஒளிப்பதிவின் மூலம் நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். 

முந்தைய டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படங்களை காட்டிலும் இப்படம் தொழில் நுட்பத்தில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. வாகனங்கள் உருமாற்றம் பெறும்போதும் மற்ற இயந்திரங்களாக மாறும் போதும் பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியாக அமைத்த இயக்குனர் மைக்கேல் பேவை பாராட்டலாம். குறிப்பாக இறுதி காட்சிகளை படமாக்கிய விதமும், உருவம் மாறும்போதும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் கதையை கொண்டு சென்றிருப்பது அருமை.

மொத்தத்தில் ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 4’ தொழில்நுட்ப சாகசம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget