எக்ஸெல்லில் பேஜ் பிரேக் கோடு தெரிய வேண்டுமா

பல செல்களில் ஒரே டேட்டா : எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க
வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் செய்திடவும். 

தொடர்ந்து அமைக்க வேண்டிய டேட்டாவினை டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன், எண்டர் கீயை அழுத்த வேண்டாம். கண்ட்ரோல் + எண்டர் கீகளை அழுத்தவும். அவ்வளவுதான்! நீங்கள் விரும்பியபடி, குறிப்பிட்ட டேட்டா, அனைத்து செல்களிலும் அமைந்திருப்பதனைக் காணலாம்.

பேஜ் பிரேக் கோடு தெரிய : எக்ஸெல் ஒர்க் ஷீட்டை பார்மட் செய்கையில் அதன் பிரிண்ட் அவுட்டில் பேஜ் பிரேக் எங்கு வரும் என்று தெரிவது நமக்கு முக்கியம். இதனை பிரிண்ட் பிரிவியூ ஆப்ஷன் சென்று பார்த்தால் தெரிய வரும். அல்லது Page Break Preview என்ற ஆப்ஷனைப் பெற்று 
பார்த்தாலும் தெரிய வரும். தொடர்ந்து ஒர்க்ஷீட்டினை எடிட் செய்தால் இந்த பேஜ் பிரேக் மாறுவதனை மீண்டும் மீண்டும் பார்த்து நாம் உறுதி செய்திட வேண்டும். எக்ஸெல் இந்த பேஜ் பிரேக்கினை இடைவெளிக் கோடாக நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளின் ஊடாகக் கொடுக்கிறது. சில செட்டிங்ஸ் அமைப்பில் இந்த கோடு தெரியாமல் இருக்கலாம். அதனைச் சரி செய்திடக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றலாம்.

1. Tools மெனு சென்று அதில் ஆப்ஷன்ஸ் செலக்ட் செய்திடவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

2. இதில் View டேப்பினை செலக்ட் செய்திடவும். இங்கு Page Breaks செக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இதில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

3. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பேஜ் பிரேக் கோடுகள் கிடைக்கும்.

பிட்ஸ் மற்றும் டிப்ஸ் : தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். 

Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home)அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக் ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக் ஷன் ஒர்க் ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget