எந்திரன் பார்ட் 2 புத்தம் புது தகவல்

'லிங்கா' படம் வெளிவந்ததையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய பேச்சுக்களும், தகவல்களும் இப்போதே
வெளிவர ஆரம்பித்து விட்டன. கடந்த மாதமே இயக்குனர் ஷங்கர் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 'லிங்கா' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஷங்கர், ரஜினியைச் சந்தித்து இது சம்பந்தமாக பேசினார் என்று எப்போதோ செய்திகளும் வந்தன.

தற்போது 'எந்திரன் 2' பற்றிய பேச்சுக்கள் அதிகமாகி வருகிறது. ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அமிர் கான் 'எந்திரன் 2'வில் நடிக்க உள்ளதாகவும், ஷங்கர் அவரைச் சந்தித்து பேசிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஐ' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படம் உலக அளவில் இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் நினைத்து வருகிறாராம். 'ஐ' படம் தற்போது இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதனால், அடுத்த படம் அதை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றால், ஹிந்தியில் முன்னணியில் ஒரு நடிகருடன் இணைந்தால் இன்னும் அதிகமாகப் பேசப்படலாம் என நினைக்கிறாராம்.

இன்னொரு பக்கம், ரஜினிகாந்த்தான் 'எந்திரன் 2' படத்தின் ஹீரோ என்றும் அமீர்கான் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் உறுதியற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு விஷயம் நடந்தால், ரஜினிகாந்த், அமீர் கான், ஷங்கர் இணையும் அந்தப் படம் நிச்சயம் மிகப் பெரிய சாதனைப் படமாக அமையும் என்பது மட்டும் உறுதி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget