மம்தா குல்கர்னியாகும் சன்னி லியோன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல புகைப்பட கலைஞர் ஜெயேஷ் செத், நடிகை மம்தா குல்கர்னியின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக
அறிவித்தார். மேலும் இப்படத்தில் நடிகை சன்னி லியோனை நடிக்க வைக்க பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயேஸ் கூறியுள்ளதாவது, மம்தா குல்கர்னியின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று எண்ணியபோது, அந்த கேரக்டருக்கு என் நினைவில் வந்தவர் சன்னி லியோன். சன்னி தவிர்த்து வேறு சில நடிகைகளையும் நான் நினைவில் வைத்திருந்தேன், ஆனால் சன்னி தான் மம்தாவுக்கு சரியான பொருத்தமாக இருப்பார். இதுதொடர்பாக சன்னியிடம் பேசி வருகிறோம். தற்போது படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். அடுத்தாண்டு இந்த படத்தை ஆரம்பிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

அதேசமயம் சன்னி லியோனிடம் இதுகுறித்து கேட்டபோது, இப்படம் தொடர்பாக நான் இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget