சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும் இதற்கும் ஒரு எளிய சிகிச்சை
இருக்கிறது. மிளகு , ஓமம், சீரகம்... மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்கவையுங்கள்.
அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு குளியுங்கள். வாரம் இருமுறை இப்படி குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவுடன் ஜொலிக்கும். தலை அரிப்பையும் இது கட்டப்படுத்தும் தலைக்குக் குளித்தவுடனே சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவார்கள்.
அரை டீஸ்பூன் மிளகு,
1 டீஸ்பூன் வெந்தயம்,
கால் டீஸ்பூன் ஓமம்..
மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு 2 டீஸ்பூன் நல்லெண்யெண் கலந்துசூடாக்கி, மிதமான சூட்டில் உச்சநிலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.
இப்படி செய்து வந்தால், தலையில் கோர்த்த நீர் வடியும். உஷ்ணம் நீங்கி கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். சிறிதளவு மிளகை, பொடி செய்து துணியில் கட்டி ஆவியில் வைத்து எடுத்து, அதை உச்ச தலையில் வைத்தாலும் நீர்வடிந்துவிடும். தலைமுடி பிளவுபடுவது என்பது ஒட்மொத்த முடி வளர்ச்சிக்கும் பாதிப்பு உண்டாக்கும் விஷயம்!
பல சகோதரிகளையும் மனம் கலங்க வைத்திருக்கும் முக்கிய பிரச்சனை இது. அவர்களின் தலைமுடி ஆரோக்கியத்துக்கு முக்கிய கவசமாகவே உதவுகிறது இந்த விசேஷ எண்ணெய்..
கடுக்காய் 20 கிராம்,
மிளகு 20 கிராம்
இரண்டையும் ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளுங்கள். அரை கிலோ நல்லெண்ணெயை காய்ச்சி, இந்தப் பொடியைப் போட்டுக் கலக்குங்கள்.
இந்த எண்ணெயைத் தினமும் தடவுங்கள். டிரையர் பயன்படுத்துபவர்கள், மிதமான சூட்டில் மசாஜ் பண்ணலாம். (அ) சூடான தண்ணீரில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு, சீப்பால் வாரி பின்னிக் கொள்ளுங்கள். நுனி பிளவு போய், முடி நன்றாக வளரத் தொடங்கும்.

கருத்துரையிடுக