பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு பழமையான சிகிச்சை

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மின்சார அதிர்ச்சியை முதுகு தண்டில் செலுத்தி தூண்டிவிடுவதன் மூலம் நோயாளிகளை மீண்டும்
இயல்பாக அசைக்க வைக்கும் ஒரு பழமையான சிகிச்சையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 26 வயதுடைய Calven Goza என்பவர், பக்கவாதம் ஏற்பட்டதால் இரண்டரை வருடமாக மார்புக்கு கீழ் பகுதியை அசைக்க முடியாமல் இருந்தார். அவர், என்னால் மீண்டும் இயல்பாக இருக்க முடியாது என்று கூறினார். 

கடந்த 30 ஆண்டுகளுகாக உருவாக்கப்பட்ட இந்த முறையை, முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்டு பக்கவாதம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்களை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை அளிக்கிறது. இந்த முறை முதுகு தண்டுக்கு ஒரு மின்சாரத் தூண்டுதல்களை கொடுத்து மூளையிலிருந்து சிக்னல்களை பிரதிபலிக்கும். 

முதுகு தண்டு சுதந்திரமாக கால்கள் மற்றும் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும், ஆகையால் இந்த முறையை பயன்படுத்தி நோயாளிகள் தங்கள் இயக்கத்தின் சில கட்டுப்பாடுகளைக் திரும்பப் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  

முதுகில் நீலமாக ஒரு சில சென்டிமீட்டர் மற்றும் 16 மின்முனைகள் கொண்ட ஒரு சாதனத்தை உட்புகுத்துவதன் மூலம் இது சாதிக்கப்பட்டது. ஒரு ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்தி நோயாளியின் முதுகுத் தண்டின் கீழ் நேரடியாக தூண்டப்படும்போது, மூளையில் இருந்து சிக்னல் பெறப்படும். பின்பு முதுகுத் தண்டில் இருந்து காலில் உள்ள நரம்புகளுக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது, இதனால் மூளையின் உதவி இல்லாமல் மூட்டுகள் மற்றும் தசைகளை நகர்த்த முடியும். 

லூயிஸ்வில் விஞ்ஞானிகள் எலக்ட்ரோடுகளை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட Calven Gozaவின் முதுகில் பதிய சைத்து கால்களில் வயர் சென்சார்களை பொருத்தினர். வளையத்துடன் கூடிய கம்பியை அவரது காலின் பெருவிரலில் மாட்டி இழுத்தனர். இரண்டு மணி நேரமாக ஆராய்சியாளர்கள் வெவ்வேறு வொல்டேஜ்களை பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தபோது, அவரது பெருவிரலால் அந்த கம்பியை வளைக்க முடிந்தது. இந்த சேதனையின் முடிவில் அவரால் முட்டியை மடக்கவும், டேபிளில் இருந்து காலை தூக்கவும் முடிந்தது. இது ஒரு அற்புதமான தருணம் என்று Goza தெரிவித்துள்ளார். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget