நடிகர் : ஆரியன்
நடிகை : லிஷா
இயக்குனர் : முனிசங்கர் கே
இசை : சி ஆர் ரவிகிரண்
ஓளிப்பதிவு : டி பி இராஜசேகர்
கிழக்கே உதித்த காதல் ஒரு பிச்சைக்காரன், ஒரு ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன், ஒரு ரவுடி இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘கிழக்கே உதித்த காதல்’.
நாயகன் ஆரியன் தெருவில் குப்பைகளை பொறுக்கி, அதை கடைகளில் கொண்டு விற்று அதன் மூலம் தனது பசியை போக்கி வருகிறான். கிழிந்துபோன அழுக்கு சட்டை, நீண்ட நாள் குளிக்காத அழுக்கு முகமாக வலம் வரும் இவனை, யாரும் அருகில் சேர்க்க மறுக்கிறார்கள்.
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த மதன், அவனுக்கு எதிர் வீட்டில் இருக்கும் நாயகி லிசியை காதலிக்கிறான். ஆனால், இவர்களது காதலுக்கு குறுக்கே வருகிறான் ரவுடி குருதேவ்.
மறுபக்கம் குருதேவின் தங்கை, ஆரியனை காதலிக்கிறாள். தன்னுடைய காதலை அவனிடம் பல தடவை எடுத்துக் கூறியும், எதையும் கண்டுகொள்ளாதவன் போல் பைத்தியக்காரன் போல அவளிடம் நடந்து கொள்கிறான் ஆரியன். குருதேவுக்கும், அவனது அம்மாவுக்கும் இவர்களது காதல் விஷயம் தெரிய வருகிறது. அவளை வேறு ஊருக்கு அனுப்பி வைக்க திட்டமிடுகின்றனர்.
இறுதியில், இவர்களது காதல் வெற்றியடைந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஆரியனுக்கு படத்தில் ஒரு சிறு வசனம்கூட கிடையாது. கிழிந்த சட்டையுடன், அழுக்கு முகமாக பார்க்கும் இவரை பார்க்கவே முடியவில்லை. பிச்சைக்காரனுக்குண்டான முகத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
மதன், அக்ரஹாரத்து பையனாக வருகிறார். இவரது முகத்தில் நடிப்பு வர ரொம்பவும் தயங்குகிறது. நாயகிகளாக வரும் இருவரின் தோற்றத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. இவர்களது நடிப்பும் பெரிதாக கவனிக்கப்படவில்லை.
இப்படத்தின் கதையை ஒரு சில நிமிடங்களில் கூறிவிடலாம். ஆனால், அதை இரண்டே கால் மணி நேர சினிமாவாக எடுத்து நம்மை ரொம்பவும் வெறுப்பேற்றியிருக்கிறார் இயக்குனர் முனிசங்கர்.
கதைக்கு பொருந்தாத காட்சிகளே படத்தில் அதிகம். நிறைய இடங்களில் காமெடி என்கிற பெயரில் இவர் ஆங்காங்கே வைத்திருக்கும் காட்சிகள் வெறுப்பைத்தான் தருகின்றனவே தவிர சிரிப்பை வரவழைக்கவில்லை.
முதல் இரண்டு காட்சியிலேயே படத்தை பார்க்க முடியாமல் தியேட்டரை விட்டு எழுந்து சென்றவர்களும் உண்டு. அந்த அளவுக்கு படத்தில் ஒரு காட்சியும் ரசிக்கும் படியாக இல்லை. அதே போல், கதையையும் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார். சொல்ல வந்த கதையை விட்டு விட்டு எதை, எதையோ காண்பித்து படம் பார்ப்பவர்களை ரொம்பவும் குழப்பமடைய வைத்திருக்கிறார்.
ரவிகிரண் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. ராஜசேகரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.
மொத்தத்தில் ‘கிழக்கே உதித்த காதல்’ உதயமாகவில்லை.

கருத்துரையிடுக