வாட்ச் மூலம் காரை இயக்கலாம்

வாட்ச் மூலம் காரை இயக்கும் நவீன தொழில்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்ப
சாதனங்களை வடிவமைப்பதில் முன்னேற்றம் கண்டு வருகிறது.   அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் பற்றி பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இன்று லண்டனில் உள்ள கோவன்ட் கார்டன் ஆப்பிள் விற்பனை மையத்திற்கு வந்த அவர் காரை இயக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்பிள் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார். 

ஆப்பிள் நிறுவனம் ரகசியமாக பேட்டரி கார் தயாரித்து வரும் செய்தி சமீபத்தில் வெளியான நிலையில், ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் இந்த புதிய வாட்ச் மூலம் அதே இயங்குதளத்தில் செயல்படும் காரை இயக்கும் திட்டம் ஆப்பிளிடம் இருப்பது தெரிய வந்துள்ளது. 

ஹூண்டாய், தனது புதிய கார் வகையான சொனாடாவில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் காரை இயக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், ஆப்பிள் புதிய வாட்ச் மூலம் காரை இயக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget