செட்டிநாடு ஃபிஷ் மசாலா செய்வது எப்படி

மீன் - 500 கிராம்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,

அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி,
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு பல் - 5,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு அரைக்கவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணையை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயம், சின்ன வெங் காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் மீைன போட்டு 10 நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget