இணைய தளம் வழியாக வர்த்தகம் வேகமாக இந்தியாவில் அதிகரித்து வருவதனை முன்னிட்டு, அமெரிக்காவில் தலைமை இடத்தைக் கொண்டு
இயங்கும் அமேஸான் நிறுவனம், தன் வர்த்தகத்தில் கூடுதலாக 200 கோடி டாலர் முதலீடு செய்திட முடிவெடுத்துள்ளது.
இதனுடைய போட்டி நிறுவனமான ப்ளிப்கார்ட் டாட் காம் நிறுவனம், 100 கோடி டாலர் முதலீடு செய்ய அறிவிப்பினை வழங்கியதை அடுத்து அமேஸான் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில், மேலும் ஐந்து சரக்கு இருப்பகங்களை அமைக்க இந்த நிதி உதவிடும். இதன் மூலம், இதன் மொத்த ஸ்டோரேஜ் திறன் 46,500 சதுர மீட்டராக உயரும் வாய்ப்பு உள்ளது.
வரும் 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையதளங்கள் வழியாக, 1,600 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ளப்படும் எனப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 8 மடங்கு அதிகம் ஆகும். இந்த அளவில், வர்த்தகம் உயர்ந்தால், மிக அதிகமான வேகத்தில் வர்த்தக வளர்ச்சியினை அமேஸான் நிறுவனத்திற்குத் தரும் நாடாக இந்தியா அமையும்.

கருத்துரையிடுக