ரஜினி மகான் சோனாக்சி சின்ஹா

‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் சோனாக்சி சின்ஹா. இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார். இது குறித்து
மும்பையில் சோனக்சி சின்ஹா அளித்த பேட்டி வருமாறு:–

வாழ்க்கையில் சில மகான்களை சந்திக்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு மாற்றத்தை ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த போது நான் பெற்றேன்.

இந்தியில் சல்மான்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், சாகித்கபூர் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் தெரியாத பல விஷயங்களை ரஜினியுடன் நடித்த போது தெரிந்து கொண்டேன். ரஜினி மகானை போன்றவர்.

அவரை ஒரு பல்கலை கழகம் என்றும் சொல்லலாம். ரஜினிக்கு தெரியாத விஷயங்களே மற்றவர்களுக்கு தெரியாத நிறைய விஷயங்களை அவர் தெரிந்து வைத்து இருக்கிறார். ரஜினியுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாட்களும் விலை மதிப்பு இல்லாதவை. படிப்படியாக முன்னேறி உயரத்துக்கு போய் விட்ட மகான் அவர்.

என்னிடம் அவர் அனுபவங்கள் பற்றி நிறைய சொன்னார். இதன் மூலம் எனக்குள்ளும் ஆன்மீகம் சம்பந்தமான பக்தி விதையை அவர் ஊன்றி விட்டார்.

உடல் பருமனாக இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல என்று நிறைய பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன். ஆனால் அதை ரஜினி சொன்னவிதம் புதுமையாக இருந்தது. அவர் சொல்லி அதை கேட்கும் போது உடம்பு ஒரு கோவில் மாதிரி தெரியும். கேமராவுக்கு முன்னால் நிற்கும் ரஜினியும் பின்னால் நிற்கும் ரஜினியும் வெவ்வேறானவர்கள். ரஜினியால் நான் ரொம்ப மாறி விட்டேன்.

இவ்வாறு சோனாக்சி சின்ஹா கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget