மார்பு எலும்பை பலப்படுத்த வேண்டுமா

முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும். வலது
கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். 

பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது கை மணிக்கட்டைப் பிடிக்கவும். இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள்இழுத்துக் கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்கவேண்டும். 

பிறகு மூச்சை வெளிவிட்டு கொண்டே முன்னே குனிந்து நெற்றியை அல்லது கீழ்த்தாடையை இடது முழங்காலில் வைத்து 20 விநாடிகளுக்கு அதே நிலையில் சாதாரண சுவாசத்தில் இருக்க வேண்டும். பிறகு ஆழ்ந்த உள் மூச்சுடன் நிமிர்ந்து கைகளை விடுவித்தவுடன் கால்களை விடுவித்தவுடன் கால்களை மாற்றி மேலே செய்தது போல் செய்யவும். 

பயன்கள் :

உள் உறுப்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடலின் எடையை குறைக்க உதவுகிறது. முதுகெழும்பு, இடுப்பெழும்பு கழுத்து போன்றவற்றை வலிமையடைய செய்கிறது. மார்பு எலும்பினை பலப்படுத்துகிறது. 

இதயம், நுரையீரல் போன்றவற்றை வன்மையடையச் செய்கிறது. கல்லீரல், மண்ணீரல் இவற்றை இயல்பு நிலையில் வைத்து உடலை பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கைகளில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் வலிமை தருகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget