பெண்கள் கட்டாயம் அறிய வேண்டியவை

தினம் தினம் பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, கொலை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் போதிய பாதுகாப்பு இன்மை மற்றும் கடுமையாக தண்டனை இல்லாததுமே ஆகும். 

பெண்கள் தனியாக போகும் போது ஏதாவது பிரச்சனை வந்தால் பெண்கள் தங்களை காத்துக் கொள்ள முன்னொச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வேலை விஷயமாக பெண்கள் பல நேரங்களில் தனியா பயணம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. 

இவ்வாறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பெண்கள் தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். பெண்கள் அவசர போலீஸ் நம்பரை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே போலீசை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். 

பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கைப்பையில் சிறிய கத்தி, மிளகாய் தூய், பெப்பர் ஸ்பிரே போன்றவற்றை வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. இதனால் நாமே நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.   ஒரு பெண் தன்னுடைய இரவு பணி முடிந்து அப்பார்மெண்ட் வீட்டிற்கு ஒரு முகம் தெரியாத ஆணுடன் லிப்டில் நுழைய நேர்ந்தால் பயப்பட கூடாது. 

பயம் கொள்ளாமல் லிப்டிற்குள் நுழைந்து விடுங்கள். நீங்கள் 13ஆவது மாடியை அடைய வேண்டும் என்றால் லிப்டின் எல்லா பட்டன்களையும் அழுத்தி விடுங்கள். இதன் மூலம் எல்லா மாடிகளிலும் லிப்ட் திறந்து மூடுவதன் மூலம் உங்கள் மீதான தாக்குதலை தவிர்க்கலாம். வேலை முடிந்து இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப நேர்ந்தால் தனியா வருவதை தவிர்க்கவும்.  
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget