கிளிசரின் இல்லாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத நமீதா

நடிகைகளுக்கும், நாய்களுக்கும் எப்போதுமே ஒரு டீப்பான பாசப்பிணைப்பு உண்டு. எந்த நடிகையாக இருந்தாலும் வீட்டில் விதவிதமான நாய்களை
வளர்ப்பார்கள். அவற்றுடன் கொஞ்சி குலாவுவதுதான் அவர்களது முக்கிய வேலையாக இருக்கும். அதனால்தான், நாயாக பிறந்தாலும் நடிகை வீட்டு நாயாக பிறக்கணும் என்று கூட புதிதாக பழமொழிகூட சொல்வார்கள்.

அந்தவகையில், தற்போது சினிமாவில் பட வாய்ப்பு இன்றி இருக்கும் நமீதா, தனது வீட்டில் இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுடன் சதா விளையாடி பொழுதை கழித்து வரும் நமீதா, தான் வெளியூர்களுக்கு சென்றால், அவற்றை தனது மேனேஜர் வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி கூறி விட்டு செல்கிறார்.

அப்படிப்பட்ட நமீதா, தனது சொந்த ஊரான குஜராத்திலும் சில நாய்களை வளர்த்து வருகிறாராம். சமீபத்தில் குஜராத் சென்று விட்டு அவர் சென்னை திரும்பியபோது, அந்த நாய்களில் ஒன்று இறந்து விட்டதாக துக்க செய்தி வாசித்தார்களாம். இதனால் கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதாராம் நமீதா.

மேலும், அந்த நாய் எப்படி செத்தது? என்று அவர் கேட்டதற்கு, வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டத்தில் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனுடன் ஏற்பட்ட சண்டையில் பாம்பு, நாயை கடித்து விட்டதாம், இதனால் நாய் இறந்து போய் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். இதனால், சென்னையில் உள்ள தனது நாய்க்குட்டிகளை கட்டியணைத்துக்கொண்டே பல நாட்களாக கவலையுடன் காணப்பட்டுள்ளார் நமீதா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget