ஆரோக்கியமாக இருப்பதென முடிவு செய்து விட்டால், முதல் வேலையாக முறையான ஃபிட்னஸ் மையத்தை அணுக வேண்டும். அந்த
இடம் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம்.
எடை, உயரம் போன்றவற்றைக் கணக்கிட்டு, உங்கள் தேவை என்ன எனத் தெரிந்து கொண்டு, உங்களுக்கான ஃபிட்னஸ் விஷயங்களைப் பரிந்துரைப்பார்கள். காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர் என்றால் சீக்கிரமே உங்களுக்கு தோள்பட்டை வலியும் முதுகுவலியும் வரலாம்.
நீண்ட தூரம் பயணம் செய்கிறவர் என்றால் முதுகுவலி வரலாம். வருமுன் காப்பதற்கான ஒரே வழி உடற்பயிற்சிதான். உடலுழைப்பே இல்லாத இன்றைய வாழ்க்கை முறையில், ஆரோக்கியமாக வாழ நினைக்கிற எல்லோருக்கும் ஏதோ ஒரு உடற்பயிற்சி அவசியம்.
பெண்களைப் பொறுத்த வரை இன்று டீன் ஏஜிலிருந்தே பருமன் பிரச்சனை தொடங்கி விடுகிறது. கல்யாணமாகி, குழந்தை பெற்ற பிறகு அது இன்னும் அதிகமாகிறது. உடற்பயிற்சி என்கிற விஷயத்தை பருமன் வந்த பிறகு நினைக்க ஆரம்பிப்பதற்குப் பதிலாக, இளவயதிலிருந்தே அதை ஒரு வழக்கமாகப் பின்பற்றத் தொடங்குவதுதான் சரி.
உடற்பயிற்சி செய்வதால் உங்கள் எடை கட்டுப்பாட்டுக்குள் வருவது மட்டுமின்றி, உங்கள் சருமம் ஆரோக்கியமாகும்... முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும்... இளமையாக மாறுவதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்! ஞாபக சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை சரியாகும். மொத்தத்தில் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் உற்சாகமாக உணர்வீர்கள்!

கருத்துரையிடுக