அடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்களை ஏவி சாதனை படைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று, கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக
கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கிரண் குமார் பேசியதாவது: அடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இது அடுத்த மாத இறுதியில் ஏவப்படும். இதற்கான தேதி இன்றும் உறுதி செய்யப்படப்வில்லை.
இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ பி.எஸ்.எல்.வி சி.34 ராக்கெட் பயன்படுத்தபடும். இதில், 3 இந்திய செயற்கைக்கோள்களாகும். மற்றவவை, அமெரிக்கா, கனடா, இந்தோனேசியா, ஜெர்மனி நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டான ஆர்.எல்.வி டிடி வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது.
இதனால் விண்வெளி ஆய்வில் செலவு கணிசமாக குறையும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது.

கருத்துரையிடுக