ஜீப்ரானிக்ஸ் ஸ்பீக்கர் ஜெப்ஸ்டேஷன் 2

பலவகை செயல், ஸ்பீக்கர் கடிகாரம், அலாரம், ப்ளூடூத், USB, SD கார்டு, FM ரேடியோ மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது ஜீப்ரானிக்ஸ், தகவல் தொழில் நுட்ப துணை பொருட்கள், பயனர் மின்னணுவியல் சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் துறையில் இந்தியாவின் முன்னணி
நிறுவனம் ஆகும். இ ந் நிறுவனம், விருது பெற்ற தன் ஸ்பீக்கர்கள் அணிவரிசையினை புதிய மாடல் ஜெப்ஸ்டேஷன் 2 வை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது. ஜெப்ஸ்டேஷன் ஸ்பீக்கர், சில வருடங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அளவு, அம்சங்க்கள் மற்றும் ஒலியள்வின் காரணமாக வாடிக்கையாளர்களிடம் சிறந்த பாராட்டைப் பெற்றது.

புதிய ஜெப்ஸ்டேஷன் 2, அதே அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது ஆகும். குறைந்த எடை கொண்ட இதை வைக்க சிறிய இடம் போதும். இதன் அதிக ஒலி அளவு மிக சுலபமாக உங்கள் அறையை நிரப்பிவிடும். எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக இந்த ஸ்பீக்கரில் ஒரு கைப்பிடி உள்ளது. இது பேட்டரியால் இயங்குவதால் இதன் இசையை நீங்கள் உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

ஜெப்ஸ்டேஷன் 2, ஏராளமான சிறப்பம்சங்களுடன் வருகிறது. இதன் உள்ளேயே பொருத்தப்பட்ட கடிகாரமும், இரட்டை அலாரங்களும் உள்ளன. இவை இரண்டும், ஸ்பீக்கர் அணைக்கப்பட்ட நிலையிலும் வேலை செய்யக்க்கூடியவை. நீண்ட நேரம் இசை கேட்க வசதியாக இந்த ஸ்பீக்கரில் 1200mAH பேட்டரி உள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய அடாப்டர் உடன் கிடைக்கிறது. ஸ்பீக்கரில், பேட்டரி சார்ஜிங்க் இண்டிகேட்டர் LED பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை அலாரங்கள் அதிக ஒலியளவைக் கொண்டவை. இவற்றை முழுமையாக நிறுத்திவிடலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு ஸ்னூஸ் (தற்காலிக நிறுத்தம்) செய்யலாம். ஸ்பீக்கரில் ‘ஸ்லீப்’ அம்சமும் உள்ளது. இதனால் முன்னரே குறிப்பிட்ட நேரத்தில் ஸ்பீக்கரை தானாகே நிற்கும்படி செய்யலாம். இந்த எல்லா அம்சங்களும் சேர்ந்து இந்த ஸ்பீக்கரை ஒரு சிறந்த படுக்கை பக்கத்து ஸ்பீக்கராக செய்கின்றன.

இணைப்பை பொருத்தவரை இது பல விருப்பத்தெரிவுகளுடன் வருகின்றது. MP3 பாடல்களை இசைக்கக்கூடிய இந்த ஸ்பீக்கருடன் USB பென்டிரைவ் அல்லது SD/MMC கார்டை இணைக்கலாம். ஒலியளவு மற்றும் பாடல் தெரிவு செய்ய LED டிஸ்ப்ளே உதவுகிறது. ப்ளூடூத்3.0 அம்சம் இருப்பதால் வயர்கள் இணைப்பின்ன்றியும் நீங்கள் இசையை கேட்கலாம். இதில் FM ரேடியோ இருப்பதால், உங்களுக்குப் பிடித்த ரேடியோ சானலை எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இதில் உள்ள ஆக்ஸிலரி இன்புட் போர்ட் உதவியால், இந்த ஸ்பீக்கருடன் நீங்கள் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்லெட்டுகள், DVD ப்ளேயர் போன்ற பல உபகரணங்களை இணைக்கலாம்.  

இந்த ஸ்பீக்கர், 10.1 செ.மீ டிரைவர்கள் வழியாக வெளிவரும்,16 வாட்டுகள் RMS அவுட்புட் பவருடன் வருகிறது.  ஸ்பீக்கரின் பின்புறம் ஒரு பாஸ் போர்ட் உள்ளது. இதன் முன்புறம் உள்ள 3.5மி.மீ இணைப்பு, நீங்கள் ஸ்பீக்கருடன் ஹெட்போனை இணைக்க உதவுகிறது. ஒரு வருட உத்திரவாதத்துடன் வரும் ஜெப்ஸ்டேஷன், அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 4899/-.
கூடுதல் விவரங்களுக்கு வலை தளம்: www.zebronics.com | www.facebook.com/zebronics
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget