தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து குறுகிய காலகட்டத்திலே தமிழ்நாட்டின் பிரதான
எதிர்கட்சித் தலைவர் ஆனார். ஆனால் அரசியல் சாணக்கியத்தனம், முழுமையான கொள்கை இல்லாததால் ஏறிய வேகத்தில் அவரது அரசியல் வாழ்க்கை சரிந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அவருக்கே டெபாசிட் கிடைக்கவில்லை. கட்சியின் அங்கீகாரம் ரத்தாகி, முரசு சின்னமும் பறிபோகும் நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் விஜயகாந்த் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விட்டார். கடைசியாக அவர் அவரது மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் மகன் நடிக்கும் 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்
இந்தப் படம் தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 10 நாட்கள் வரை படப்பிடிப்பும் நடந்தது. தேர்தல் வந்து விட்டதால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பிரச்சாரத்துக்கு சென்று விட்டார். தற்போது அனைத்தும் முடிந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்து விட்டார்.
இதுகுறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “நம் வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது, மனம் தளரவேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி. தற்போது தமிழன் என்று சொல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று குறிப்பிட்டு படத்தின் ஸ்டில்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது படப்பிடிப்புகள் மும்முரமாகி இருக்கிறது. இதில் விஜயகாந்த் ஒரு எழுத்தாளராக நடிப்பதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக