ஒருவழியாக இரண்டாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு நாளை(மே 27ம் தேதி) சிம்புவின் இது நம்ம ஆளு படம் ரிலீஸாக இருக்கிறது. சிம்புவுடன் மீண்டும் நயன்தாரா இணைந்துள்ளார். இவர்களுடன் ஆண்ட்ரியா, சூரி ஆகியோரும் முதன்மை ரோலில்
நடித்துள்ளார். முதன்முறையாக பாண்டிராஜ் நகரத்து காதல் கதையை படமாக்கியுள்ளார்.
இப்படம் பற்றி சிம்பு கூறியிருப்பதாவது... இது நம்ம ஆளு போன்ற உணர்ச்சி மிகுந்த காதல் கதையில் நான் பயணித்து உள்ளது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையை கையாண்ட இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது மட்டுமில்லாமல், தனித்துவமான நடிப்பால் ஒட்டு மொத்த படக்குழுவினரையும் கவர்ந்த நயன்தாராவுக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம். இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து குடும்பங்களையும் கவரும் விதத்தில் இந்த படம் இருக்கும். இதற்கு உறுதுணையாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன்.
நம் வாழ்க்கையில் பெண்கள் இல்லாமால் எதுவும் இல்லை. ஒரு அம்மாவாகவும், தங்கையாகவும், அக்காவாகவும், என அவர்களின் பங்கு நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே போகும். அத்தகைய மகிமை மிகுந்த பெண்மையை மிக அழகாக இந்த படத்தில் கூறியுள்ளோம். எனக்கு பக்க பலமாக இருந்து, இந்த படத்தை பல தடைகளுக்கு பிறகு வெளியிட பாடுப்பட்ட எனது தந்தைக்கும், இந்த படத்திற்கு ஏற்ற பாடல்களை அளித்த இசை அமைப்பாளர் குறளரசன் அவருக்கும் எனது நன்றிகளை கூறி கொள்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக, என்னுடைய முதுகெலும்பாக செயல்படும் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் என் இருகரம் குவித்து நன்றிகளை சொல்லி கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கு நான் தலை வணங்கி நன்றிகளை கூறுகிறேன்".
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

கருத்துரையிடுக