கூந்தல் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதற்காக சிறந்த ஷாம்புகள், மற்றும் கூந்தல் அழகு சாதனப்  பொருட்களை பயன்படுத்துவதால் நீளமான, கூந்தலை பெற
முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே,கூந்தல்  வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை அவசியம்.

புரதச்சத்து கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன . நம் உடலில்  காணப்படும் புரதச்சத்து பற்றாக் குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே,  கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால்  பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

கார்போ ஹைடிரேட்

கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போ ஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போ  ஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால்  ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

கொழுப்புசத்து

உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல்  ஆகியவற்றை தடுக்கிறது . எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை  உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புசத்து கிடைக்கவில்லை என்றால்  டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

வைட்டமின்கள்

 மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும்,  “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதி செய்து, தலை  போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது. நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி,  குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை  பராமரித்து , கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. ஆலிவ் ஆயில், சோயா பீன்ஸ், பச்சைக் காய்கறிகள்  ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

”பயோட்டின்’கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை  தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால் பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது. இரும்புச் சத்து, கூந்தலுக்கு  ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும்.

பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.  கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும் ,1.5  லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும்  ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. மேலும் , டீ, காபி  மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றிவிடுகிறது. அவை,  உணவில் இருந்து ஊட்டச்சத்து  உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என  குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget