புதன் கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு

நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதன்கோள் சூரியன் முன் கடக்கும் அரிய நிகழ்வு வரும் 9ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது, இந்த அரிய நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு
பின்னர் நடைபெற உள்ளது. புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.

இந்தியாவில் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, 2003ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஆகிய தேதிகளில் இந்த அரிய நிகழ்வு நடந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி இந்த நிகழ்வை காணலாம். அதன் பின்னர் 2032-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும். இது பல பில்லியன் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

துரதிஷ்டவசமாக வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளில் சூரிய உதயம் ஆகும்போது பார்க்க முடியும். ஆனால், புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது மட்டுமே இந்த நிகழ்வை காணமுடியும். இதனை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget