நான் ரொம்ப பாசங்க ஜீவிதா

தேவதை, ஆபீஸ், வைராக்கியம், கைராசி குடும்பம் என பல தொடர்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது பாசமலர் தொடரில் உமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர், அடுத்தபடியாக ஒரு
படத்தில் நாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்.

இதுகுறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களைப்பொறுத்தவரை அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நான் நடிக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படியே நடித்து வருவதால் வெயிட்டான வேடங்களாக இருந்தால் மட்டுமே டைரக்டர்கள் என்னை புக் பண்ணுகிறார்கள். மேலும் தற்போது நடித்து வரும் பாசமலர் சீரியலின் உமா கேரக்டர் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களை கவர்ந்துள்ளது. அந்த அளவுக்கு ஒரு செண்டிமென்டாக ரோலில் நடிக்கிறேன். மேலும், நான் என்னை சார்ந்தவர்களிடம் ரொம்ப பாசமாக இருப்பேன். அதைத்தான் சீரியல்களில் வெளிப்படுத்துகிறேன். அப்படி எனது இயல்புத்தன்மையை சீரியல்களில் வெளிப்படுத்துவதால் நேயர்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.

மேலும், சீரியல்களைத் தொடர்ந்து சினிமாவில் என்று தணியும் என்ற படத்தில் நடித்தேன். அதையடுத்து இன்னொரு படத்திலும் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறேன். சீரியல்களைப்போன்று சினிமாவிலும் என் திறமைக்கு வேலை கொடுக் கும் கேரக்டர்களைத்தான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, என்னைப்பொறுத்த வரை சினிமா- சீரியல் இரண்டையுமே ஒரேமாதிரிதான் பார்க்கிறேன். திரை மட்டுமே வித்தியாசம். மற்றபடி நான் ஒரேமாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் ஜீவிதா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget