கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கள்ளத்தோணி, அரி-யின் திரைப்பட வரலாறு' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக 'இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேதான்
போட்டியே. 'பீட்சா, ஜிகர்தண்டா' ஆகிய இரண்டு படங்களைக் கொடுத்து ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் நல்ல பெயரை எடுத்திருந்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'இறைவி' படம் அவருக்கு இறங்கு முகத்தைக் கொடுக்கவே வாய்ப்புகள் அதிகம். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ரசிகர்களின் பொறுமைக்கு மிகப் பெரிய சோதனையைக் கொடுக்கிறார் கார்த்திக். திரைக்கதையமைப்பில் கார்த்திக் சுப்பராஜ் குழம்பியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். திங்கள் கிழமைக்கு மேல் 'இறைவி' வசூலில் மிகப் பெரிய இறக்கம் வரும் என்கிறார்கள்.

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. சூரியின் 'புஷ்பா புருஷன்' மேட்டர்தான் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. கொஞ்சம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' சாயல் தெரிந்தாலும், 'வெண்ணிலா கபடிக் குழு'வின் நட்சத்திரங்களான விஷ்ணு விஷால், சூரி இந்தப் படத்தில் 'வேற' ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியூர்களில் 'இறைவி' தூக்கப்பட்டு இந்தப் படத்தைப் போடும் நிலை அடுத்த வாரம் முதல் வரும் என்கிறார்கள்.

நேற்றைய வெளியீட்டில் 'இறைவி'யை விட 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' வசூலில் முந்துகிறார் என்றே தகவல்கள் வருகின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget