எக்ஸெல் பார்மட் வகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

எக்ஸெல் பார்மட் வகை : எக்ஸெல் மாறா நிலையில் தன் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளைக் குறிக்க எழுத்துகளையும் எண்களையும் (A/1) பயன்படுத்துகிறது. நெட்டு
வரிசைகள் ஆங்கில எழுத்து வரிசையிலும், படுக்கை வரிசைகள் எண்கள் வரிசையிலும் குறிக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு கட்டத்தினை (Cell) குறிக்க, அதற்கான எழுத்து மற்றும் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். பார்முலாக்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் இவ்வாறே எழுதப்பட வேண்டும். இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு கட்டத்தினைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

அனைத்து ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்களும் இதே அமைப்பினை மேற்கொள்வதில்லை. அவை இன்னொரு குறியீட்டு முறையினைப் பயன்படுத்துகின்றன. படுக்கை வரிசைக்கான ஆங்கிலச் சொல் Row என்பதில் R என்பதையும், நெட்டு வரிசைக்கான ஆங்கிலச் சொல்லான Column என்பதில் C என்பதனையும் கொண்டு அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதனை எண்ணால் இணைத்து குறிப்பிடுகின்றன. எடுத்துக் காட்டாக, முதல் செல் R1C1 என்ற குறியீட்டு வகையில் குறிப்பிடப்படும். ஐந்தாவது படுக்கை வரிசையும், ஏழாவது நெட்டு வரிசையும் சந்திக்கும் இடத்தில் உள்ள செல் R5C7 எனக் குறிப்பிடப்படும்.

அப்படியானால், எந்த முறையை நாம் மேற்கொள்வது? இதனை எப்படி எக்ஸெல் புரோகிராமிற்குத் தெரியப்படுத்துவது? நாம் எந்த முறையைப் பயன்படுத்துகிறோம் என்பதனைக் கீழே குறிப்பிட்டுள்ள முறையில், எக்ஸெல் புரோகிராமிற்குத் தெரியப்படுத்தலாம்.

1. எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளவும். இதில் Excel Options என்ற பட்டனில் கிளிக் செய்து, Excel Options டயலாக் பாக்ஸைப் பெறவும். எக்ஸெல் 2010 மற்றும் 2013 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் File டேப் தட்டி இதனைப் பெறலாம்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Formulas என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இங்கு கிடைக்கும் பாக்ஸில் வலது பக்கம் 'Working with Formulas' என்ற பிரிவினைப் பார்க்கவும். 

4. நீங்கள் R1C1 குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதாக இருந்தால், R1C1 Reference Style செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். A1 குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த பாக்ஸில் டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மாறா நிலையில் எக்ஸெல் A1 குறியீட்டு முறையினையே பின்பற்றும்.

5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு அமைப்பினை மாற்றலாம்.

முதலில் மாற்ற வேண்டும் என விரும்பும் தேதிகளைக் கொண்ட செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின், அந்த செல்கள் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Number” டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இதில் உள்ள Category பட்டியலில் “Custom” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “m.d.yyyy” (மேற்கோள் குறிகள் இல்லாமல்) என டைப் செய்திடவும். இங்கு “mm.dd.yyyy” என உள்ளீடு செய்தால், ஒற்றை இலக்க தேதி மற்றும் மாதம் வருகையில், அந்த இலக்கத்தின் முன் ஒரு சைபர் சேர்க்கப்படும். (எ.கா. 01.04.2016) இனி, தேதிகள் இடுகையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, புள்ளிகள் இருப்பதைக் காணலாம். பின் நாளில், இது சரியில்லை, பழைய சாய்வு கோடே இருக்கட்டும் என விரும்பினால், இதே முறையைப் பின்பற்றி, கேடகிரி பட்டியலில், “Date” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Type” பட்டியல் பெட்டியில், நீங்கள் விருப்பப்படும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget