லாவா எக்ஸ் 17 ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் ஒன்று அனைவரும் வாங்கும் அளவிலான விலையிட்டு (ரூ. 5,650) விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில் உள்ளது. இது ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட, கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாகும். இதன் பரிமாணம் 145 x 72 x 8.5 மிமீ. பின்புறக் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்டு 8 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும் அமைக்கப்பட்டுள்ளன.

வீடியோ பதிவு 1080p@30fps திறனுடன் செயல்படுகிறது. இதன் குவாட் கோர் சிப் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதில் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டுள்ளது. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர், எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் செயலிகளும் இயங்குகின்றன. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம்

நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, 3ஜி, 4ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் லித்தியம் பாலிமர் பேட்டரி 2350 mAh திறன் கொண்டது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget