நடிப்புக்கு பிரேக் விட்ட சுஜிதா

குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியவர் சுஜிதா. அதன்பிறகு சீரியல்களில் லீடு ரோல்களில் கணவருக்காக,
மகாராணி, மருதாணி, விளக்க வச்ச நேரத்திலே, மைதிலி, ஒரு கை ஓசை என பல சீரியல் களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த சுஜிதாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்களில் காண முடியவில்லை.

என்ன காரணம்? என்று சுஜிதாவைக் கேட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சீரியல்களில் நடிக்காமல் பிரேக் கொடுத்ததற்கு என் மகன்தான் காரணம். அவன் குழந்தையாக இருந்தபோது என்னை தேடமாட்டான். ஆனால் ஓரளவு விவரம் தெரிந்த பிறகு நான் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்காக இரண்டு வருடங்களாக சீரியல்களில் நடிக்கவிலை. தற்போது பிரீகேஜி படிக்கும் அவன், விரைவில் எல்கேஜி படிக்கப்போகிறான்.

அதனால், மீண்டும் நான் நடிக்க தயாராகி விட்டேன். ஏற்கனவே நடித்தது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறும் சுஜிதா, ஒரு அம்மாவாக இருந்து பாச உணர்வுகளை வெளிப்படுத்திய எனக்கு இப்போது செண்டிமென்ட் வேடங்களில் கிடைத்தால் உணர்வுப்பூர்வமாக நடித்து நேயர்களை உருக வைத்து விடுவேன் என்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget