முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி

முருங்கைக்காய் - 2,
குழைய வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - பாதி,

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
சிறிய தக்காளி - 1,
சோள மாவு, கேரட் துருவல்,
வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, நசுக்கிய பட்டை,
கிராம்பு - தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் முருங்கைக்காய், உப்பு, பட்டை, கிராம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கவும். ஆறியதும் சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து தனியே வைக்கவும். வெந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு, வடித்த தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கேரட் துருவல், தக்காளி சேர்த்து வதக்கி கொதிக்கும் கரைசலில் கொட்டவும். முருங்கைக்காய் சதைப்பற்று சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து 2 கொதி வந்ததும் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். 

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget