கொள்ளு அடை


தேவையான பொருட்கள்

கொள்ளு - கால் கப் 

பார்லி - கால் கப் 
வெள்ளை சென்னா - கால் கப் 
புழுங்கல் அரிசி - கால் கப் 
வால் நட்  - கால் கப் 
ராகி மாவு - ஒரு மேசை கரண்டி 
இஞ்சி - ஒரு அங்குல‌ துண்டு 
பூண்டு - 3 ப‌ல் 
ப‌.மிள‌காய் - 2 
கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை - சிறிது 
சின்ன‌ வெங்காய‌ம் ‍ - 6 
உப்பு - தேவைக்கு 
ஆலிவ் ஆயில் -  2 ஸ்பூன் 

செய்முறை

• கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை, சின்ன‌ வெங்காய‌ம், ப‌.மிள‌காய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• கொள்ளு, வெள்ளை சென்னா , அரிசியை இரவே ஊற போடவும். 

• பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும். 

• வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊற‌வைத்து தோலெடுக‌க்வும். 

• அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும். 

• அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து மீதி உள்ள‌ கொள்ளு, வெள்ளை சென்னா,  பார்லி,  வால் ந‌ட்டை,  பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக‌க்வும். 

• அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும். 

• இந்த கலவையை தோசைக‌ளாக‌ கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget