![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiewuiRX2RaxYkU2r_jTB4wHSgunFAenScQptdpb3i6zaD7BjRd7QIOF7HHM5uLnM8NOVpVK2O87kKetFKDhmmEQrIkpwRLyBSpET02QuKXISqZ4LgjKeTgnpRzFPURdU7wYTbYd_JUX6Ep/s200/Astrologyslide-2.jpg)
பொது விதிப்படி சனி பெயர்ச்சியாகும் தேதியில் இருந்து ஆறு மாதம் முன்னரே அதன் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்..அதன் படி பார்த்தால் மே 2ம் தேதியே அதன் பலன் தெரிய ஆரம்பித்து இருக்க வேண்டும்..ஆனால் அந்த சமயத்தில் சனி வக்கிரம் அடைந்ததால் வக்கிர நிவர்த்தி ஜூலை 16ல் நிறைவடைவதால் , ஜூலை 16 முதல் சனி பெயர்ச்சியின் பலாபலன்கள் தெரிய ஆரம்பிக்கும்
சனி பகவானுக்கு துலாம் ராசி உச்ச வீடாகும்..அங்கு அவர் வழக்கமாய் தாங்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகள் டென்ட் அடித்து தங்கி நீண்ட சுப/அசுப பலன்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் வாரி வழங்கினார்..உச்ச வீட்டில் நீண்ட காலமாய் தங்கி சுப பலன்கள் நடக்கும்போது கருணை உள்ளத்தோடும் அசுப பலன்கள் தரும்போது கடுமையாகவும் நடந்துகொண்டார் சனி பகவான்.
விருந்தாளி வீட்டிற்கு செல்லும்போது நாம் எப்படி நமது சேட்டைகளை அடக்கி நல்ல பிள்ளையாய் இருப்போமோ அதே போன்று சனியும் விருச்சிகத்துக்கு செல்லும்போது தனது சுயரூபத்தை சற்று குறைத்துகொள்வார்..எனவே நன்மையையும் தீமையும் சரி சமமாய் இருக்கும்..
கருத்துரையிடுக