
இன்றைய காலத்தில் திருமணமானவுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வதை விட, வாழ்க்கையில் செட்டில் ஆனப் பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று
நினைக்கும் தம்பதிகள் தான் அதிகம். ஆனால் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் 35 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது. இப்படி 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க முயற்சித்தால், அது முடியாத காரியமாகிவிடுகிறது.
ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் வளர்தல் மற்றும் கருப்பையின் அகத்திரை கடினமாதல் போன்றவையும் தடையை ஏற்படுத்துகின்றன.