மீண்டும் அறிமுகமாகும் ஐ போன் 4

apple-iphone-4
இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும்
இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது. தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளது. 
apple-iphone-4
ஆனால், தற்போதைய விலை கூட, ஆப்பிள் போனை மத்திய அளவில் விலையிடப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்கள் வரிசையில் கொண்டு வரவில்லை என, மொபைல் போன் விற்பனைச் சந்தையைக் கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றனர். ஆப்பிள், பெரும்பாலும் மத்திய அளவிலான விலையிடப்பட்ட போன் சந்தையில் தன் வாடிக்கையாளர்களை எப்போதும் கொண்டதில்லை. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget