குழந்தைகளுக்கான புத்தம் புது டேப்லெட்

Eddie ' tablet in India
மெடிஸ் லெர்னிங் நிறுவனம் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படை லெர்னிங் டேப்லெட்டான 'எடி' டேப்லெட்டை இந்தியாவில்
அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 என்று விலையிடப்பட்ட டேப்லெட் 2 முதல் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு இலக்காக உள்ளது. நிறுவனத்தின் படி, 'எடி' எடுகேட்டர் செலக்டர் லெர்னிங் கன்டன்ட் (educator selected learning content), கிட் சேஃப் என்வைரான்மென்ட் (kid safe environment) மற்றும் ஹய் குவாலிட்டி ஹார்ட்வேர் (high quality hardware) உடன் வருகின்றது.
Eddie ' tablet in India
மேலும், இது நம்பகமான வலைத்தளங்களின் அணுகலை மட்டும் அனுமதிக்கின்ற கிட் சேஃப் ப்ரவுசர் கொண்டுள்ளது. பெற்றோர்கள் டேப்லெட்டில் தங்கள் குழந்தைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றிய விவரமான அறிக்கைகளும் கிடைக்கும். பெற்றோர்களின் தேவை படி ஒவ்வொரு குழந்தைகளின் தொடர்புடைய கன்டன்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மூன்று குழந்தைகள் வரை அவர்களின் விவரக்குறிப்புகளை எடி டேப்லெட்டில் உருவாக்க முடியும். எடி டேப்லெட்டில் 150 க்கும் மேற்பட்ட கல்வி விளையாட்டுகள் உடன் வருகிறது மற்றும் பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget