அமெரிக்கன் ஹஸ்ல் சினிமா விமர்சனம்

மூன்று,'கோல்டன் குளோப்' விருது களைப் பெற்று, ஆஸ்கர் விருதுக்கான பந்தயத்தில் குதித்துள்ள படமிது. கறை படிந்த அரசியல்வாதிகளை பிடிக்க உதவும், தகிடுதத்
ஜோடி. கடைசியில் தடுமாறிப் போகும் அமெரிக்க காவல் துறை.இர்விங் ரோஸன் பெல்ட் (கிறிஸ்டியல் பேல்), சின்ன வயதிலிருந்தே, சட்டத்தை மதிக்காதவன். சின்ன வயதில், அப்பாவின் கண்ணாடி கடையின் வியாபாரம் பெருக, ஊரில் உள்ள கண்ணாடிகளை, கல்லெறிந்து உடைத்தவன். தன் ஒரே பாச மகனுக்காக, அலுப்பூட்டும் தாம்பத்திய வாழ்க்கையை, மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன். அவன் வாழ்க்கையில், உண்மையான காதலுடன் வருகிறாள், சிட்னி பிராசர் (ஏமி ஆதம்ஸ்). மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சிட்னியை, லண்டன் பணக்காரியாக வேடம் போட வைத்து, தில்லாலங்கடி வேலைகளை அரங்கேற்றுகிறான், இர்விங். ஆனால், அவனை கண்ணி வைத்து பிடிக்கிறார், அமெரிக்க காவல் துறை அதிகாரி ரிச்சி டிமாஸோ (பிராட்லி கூப்பர்). விடுதலைக்கு ரிச்சி போடும் நிபந்தனை என்ன தெரியுமா? பெரிய மீன்களை பிடிக்க இர்விங் உதவ வேண்டும்.

லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget