
Youth has no age! நடிகை உமா ரியாஸை பார்க்கும் போது, உண்மையாகிறது இந்த வாசகம். காலேஜ் படிக்கிற பையனுக்கு அம்மா என்றால் நம்ப முடியவில்லை!
இளமையின் ரகசியம் கேட்டால் சிரிப்பையே பதிலாகத் தருகிறார் உமா. நிஜமாகவே அதுதான் அவரது இளமையின் ரகசியமாம்!
‘‘நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும், அதாங்க உண்மை. எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, எப்போதும் இளமையாவும் இருப்பீங்க... செலவே இல்லாத, சிம்பிளான டெக்னிக்...’’ - மறுபடி சிரிக்கிறவரிடம் சீரியஸாக சில டிப்ஸ் கேட்டோம்.
‘‘ஒல்லியான உடல்வாகுங்கிறது எனக்கு பரம்பரையா அமைஞ்சது. அதுக்காக என்ன வேணா சாப்பிடறது, எப்படி வேணா இருக்கிறதுன்னு என் உடம்புக்கும் ஆரோக்கியத்துக்கும் நான் துரோகம் நினைச்சதில்லை. கடவுள் கொடுத்த இளமையையும் ஆரோக்கியத்தையும் காப்பாத்திக்கறதுக்கான சின்னச் சின்ன முயற்சிகளை சரியா பண்ணிட்டிருக்கேன்... அவ்வளவுதான்’’ என்கிறவர் அப்படி என்ன முயற்சிகளைச் செய்கிறார்?
கருத்துரையிடுக