மகளிருக்கு வரும் உடல் உபாதைகள்

most common health problems women
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து
நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.
அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும் மிக முக்கியமான சில உடல் பிரச்சினைகளை இப்பொழுது பார்ப்போம்.
மாதவிலக்கு பிரச்சினைகள்: ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன் வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, மார்பக வீக்கம், மலச்சிக்கல், மூட்டு மற்றும் தசை வலி, முகப்பரு மற்றும் ஊசலாடும் மன உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.
பாலிசிஸ்டிக் கருப்பை நோய்: இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடையாமல் மற்றும் சிறியதாக இருக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
கருப்பை கட்டிகள் (நார்த்திசுக்கட்டிகள்): நார்ப் பொருளால் கட்டியானது கருப்பையில் தோன்றுவதால் அதிகமான உதிரப்போக்கு மற்றும் வலி, கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கும். இக்கட்டிகள் பொதுவாக இயற்கையாகவே மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு சுருங்கி விடும். சில நேரங்களில் அவை சுருங்காமல் மிகுந்த வலியைக் கொடுக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget