20 ஆண்டு பழமையான நோக்கியா ட்யூன்

நீங்கள் நோக்கியா 2011 மாடல் போன் ஒன்றை வாங்கி இருந்தால், அதில் உள்ள நோக்கியாவிற்கு மட்டுமே உரித்தான ரிங் டோனைக் கேட்டிருப்பீர்கள். சென்ற 1994
ஆம் ஆண்டிலிருந்து இந்த ட்யூன் நோக்கியா போனுடன் தரப்பட்டு வருகிறது.

தன்னுடைய லூமியா விண்டோஸ் போன்களில் அமைக்க, இதே ட்யூனின் திருத்தப்பட்ட பதிப்பினை அமைத்துத் தர போட்டி ஒன்றை, 2011 ஆம் ஆண்டில் நோக்கியா அறிவித்திருந்தது. இதே போட்டியை, இந்தியா உட்பட பல நாடுகளில் 2012 ஆம் ஆண்டிலும் அறிவித்தது.
இது குறித்து, இந்த ட்யூனை அமைப்பதில் துணை புரிந்த இசை அமைப்பாளர் தாமஸ் டோல்பி குறிப்பிடுகையில், இந்த குறிப்பிட்ட ட்யூன் 150 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டதாகவும், அதன் திருத்திய பதிப்பு 1902 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டதாகவும் கூறி உள்ளார். இந்த ட்யூனின் பெயர் Grande Valse. 1902ல் உருவாக்கப்பட்ட இந்த ட்யூன், 92 ஆண்டுகள் கழித்து, நோக்கியா மாடல் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
உங்களிடம் நோக்கியா போன் இருந்தால், மேலே தரப்பட்ட தகவல்களுடன் இந்த ட்யூனைக் கேட்டுப் பார்க்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget