சருமம் மிருதுவாக வேண்டுமா

முகத்தில் ஆலிவ் ஆயிலை நன்கு பரவலாக தடவிக் கொள்ளவும். சர்க்கரையை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, விரல்களை ஈரப்படுத்தி சர்க்கரையில் தோய்த்து,
முகத்தில் வைக்கவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை சர்க்கரையில் ஈரப்படுத்திய விரல்களைத் தோய்த்து முகம் முழுவதும் சர்க்கரை பரவும்படி செய்யவும்.
இது சரும துவாரங்களை நன்கு சுத்தப்படுத்துவதோடு முக வீக்கத்தையும் தணிக்கும். மேலும், சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கும் போது, சருமத்தின் பளபளப்புக் குறையாமல் இருப்பதற்கு ஆயில் உதவி செய்கிறது. நான்கு அல்லது ஐந்து லவங்கத் துண்டுகளை நன்றாக வெந்நீரில் ஊற வைத்து, அத்துடன் ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இவை இரண்டுக்கும் உள்ள மருத்துவ குணத்தால், முகத்தில் பருக்கள் வராமலும், எண்ணெய்ப் பசை இல்லாமலும் தடுக்கலாம். மேலும், சருமம் அதன் மென்மைத்தன்மையை இழக்காது.
பாதாம், பிஸ்தா, கசகசா மூன்றையும் அரை டீஸ்பூன் எடுத்து பாலில் ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். க்ரீம்போல வந்ததும், அதனை கழுத்திலிருந்து முகம் வரைக்கும் நல்ல அடர்த்தியாகப் போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இது, சருமத்தின் வறட்சியை நீக்கி, தேவையான எண்ணெய்ப் பசையைக் கொடுத்து முகத்தை பளபளப்பாக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget