விரல் நகங்களை அழகாக்குவது எப்படி

* விரல்கள் மற்றும் நகங்கள் சொரசொரப்பு நீங்கி பளபளப்பாக, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ்
செய்யலாம்.

* நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால், துத்தி இலையை, சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து, பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும்.

* நகங்களைச் சுற்றி தடித்து, வலியிருந்தால், வெதுவெதுப்பான நீரில், டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், வலி நீங்கி நகம் சுத்தமாகும்.

* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால், நகங்கள் உடையாமல் இருக்கும்.

* வெற்றிலையில், சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து, நகத்தில் வைத்து கட்டினால், நகத்தைச் சுற்றி வரும் புண் (நகச்சுத்தி) குணமாகும்.

* முருங்கைக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரீச்சம்பழம் போன்ற உணவு வகைகள், நகத்தை பாதுகாக்க உதவும்.

* இளஞ்சூடான நீரில், துளசி மற்றும் புதினாவை போட்டு, விரல்களை பத்துநிமிடம் வைத்தால், கிருமிகள் இறந்து நகம் சுத்தமாகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget