சாம்சங் காலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி எஸ் 5 வரிசையில், 3ஜி திறன் கொண்ட போனை சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது, அதே
மொபைல் போனின் 4ஜி திறன் கொண்ட மாடல் போனை சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 53,500. இதன் ஸ்நாப் ட்ரேகன் 801 ப்ராச சர் 2.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. மற்ற அனைத்தும் அதன் 3ஜி மாடல் போனில் உள்ளதாகவே உள்ளது. இதன் திரை 5.1 அங்குலத்தில் எச்.டி. திறன் கொண்டதாக (1920 × 1080 பிக்ஸெல்கள்) Super AMOLED டிஸ்பிளே தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. தூசு மற்றும் நீர் உட்புகா வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி மீடியா செயல்பாடுகளுக்கு நல்ல மொபைல் போனை விரும்பும் பயனாளர்களுக்கென இது வடிவமைத்துத் தரப்பட்டுள்ளதாக, சாம்சங் நிறுவன துணைத் தலைவர் அஸிம் தெரிவித்தார். 

இதன் கேமரா 16 எம்.பி. திறனுடன், எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதில் ஹை டெபனிஷன் வீடியோ பதிவினை மேற்கொள்ளலாம். இதன் முன்புறக் கேமரா 2.1 எம்.பி. திறனுடன் உள்ளது. இதன் தடிமன் 8.1 மிமீ. எடை 145 கிராம். போனின் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. தரப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜி.பி. வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் ஸ்மார்ட் டி.வி. ரிமோட் ஆகச் செயல்படும் வகையில் இன்ப்ரா ரெட் இயக்கம் தரப்பட்டுள்ளது. S Health 3.0 மற்றும் இதயத் துடிப்பினை அளவிடும் சென்சார் இதில் இயங்குகிறது. நெட்வொர்க் இயக்கத்திற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2800mAh திறன் கொண்டுள்ளது. 

தங்க நிறம், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த மாடல் வெளியாகியுள்ளது. சென்ற ஜூலை 20 முதல் சாம்சங் போன்கள் விற்பனை செய்திடும் அனைத்து கடைகளிலும் இது இடைக்கிறது. இதனை வாங்குபவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 4ஜி டேட்டா 5ஜி.பி. அளவிற்கு இலவசமாகப் பயன்படுத்த தரப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget