மிஸ் இந்தியா பார்வதி ஓமனக்குட்டன்

கேரளாவைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் மிஸ்.இந்தியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்று உலக அழகி போட்டியில் தோற்றுத் திரும்பியவர்.
இந்தியில் யுனைடெட் சிக்ஸ், தமிழில் பில்லா&2, மலையாளத்தில் சேக் யூ படங்களில் நடித்தார். எந்த படமும் ஹிட்டாகவில்லை. இதனால் மீண்டும் மாடலிங் பேஷன் ஷோ என பாதை மாறினார்.

இந்த நிலையில் தமிழில் வெளிவந்து ஹிட்டான பீட்சா படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். அந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் கேரக்டரில் நடிக்க, பார்வதி ஓமணக்குட்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் வருகிற 18ந் தேதி ரிலீசாகிறது. இந்த படம் பற்றி பார்வதி ஓமணக்குட்டன் கூறியிருப்பதாவது:

நான் ராசியில்லாத நடிகை, நடிக்கத் தெரியாதவள் என்கிற பேச்சுக்கெல்லாம் பீட்சா முடிவு கட்டும். என்னை வெறும் மாடல் என்று விமர்சித்தவர்களே என் நடிப்பை புகழ்வார்கள். தமிழில் வந்த பீட்சாவை பார்த்து அசந்து விட்டேன். அதற்கு சிறிதும் பங்கம் ஏற்படுத்தாமல் நடித்திருக்கிறேன். இந்தப் படம் பாலிவுட்டில் நான் நினைத்த இலக்கை அடைய பாதை காட்டும். என்கிறார் பார்வதி ஓமணக்குட்டன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget