பெண்களை கவரும் ரெடிமேட் பிளவுஸ்கள்

முன்பெல்லாம் திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் அணிவதற்காக பெண்கள் பட்டு துணிகளை ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கி
தையல்  கடைக்காரர்களிடம் கொடுத்து விட்டு குறித்த நேரத்தில் கிடைக்குமா என்ற டென்ஷனுடன் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இன்றைய நாகரிக  உலகில், வேகமான சூழலில் ஜாக்கெட் ரகங்களை தைப்பதற்காக காத்திருக்க முடியாது என்பதால் மார்க்கட்டில் ரெடிமேடு பிளவுஸ் ரகங்களின்  விற்பனை களை கட்டுகிறது. அதிலும் கண்ணை கவரும் ஜமிக்கி, ஜர்தோஷி, பேட்ச் ஒர்க், ஸ்டோன் ஒர்க், எம்ப்ராய்டரி டிசைன்களுடன் பார்த்ததும்,  வாங்கத் தூண்டும் வகையில மார்க்கெட்டில் கிடைக்க கூடிய ரெடிமேடு பிளவுஸ் வகைகளுக்கு பெண்களிடம் செம வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 

ரெடிமேடு பிளவுஸ் ரகங்களில் பட்டு, சில்க் காட்டன், காட்டன், ஷிப்பான் போன்ற துணிரகங்களை கொண்டு தேவைக்கேற்ப தயார் செய்யப்பட்டு  விற்பனைக்காக வருகிறது. ஒரு காலத்தில் மேல் தட்டு பெண்களும், பெண் தொழிலதிபர்கள், பெண் உயரதிகாரிகள் மட்டுமே பிளவுஸ்களில்  எம்ப்ராய்டரி டிசைன்கள், ஜமிக்கி, ஜர்தோஷி போன்றவற்றை செய்து அணிவார்கள் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த மாயை அகன்று யார்  வேண்டுமானாலும் எளிதில் டிசைனிங் பிளவுஸ்களை அணிந்து செல்லலாம் என்ற நிலையை ரெடிமேடு பிளவுஸ்களின் வரத்து ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஈரோட்டிலுள்ள ரெடிமேடு பிளவுஸ் ரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கூறியதாவது:

புடவைகளில் எந்தளவிற்கு வேலைப்பாடுகள் உண்டோ, அதே அளவிற்கு பிளவுசிலும் வேலைப்பாடுகளை செய்து தர முடியும். பிளவுசில் அதிக  வேலைப்பாடுகள் இருந்தால் அணியும் புடவைக்கு மேட்சிங்காக இருப்பதுடன், சரியான பிட்டிங்காக காட்சியளிக்கும். சல்வார்கமீஸ், குர்தீஸ்  அணியக்கூடிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முக்கிய விழாக்களில் பங்கேற்கும் போது இந்த உடைகளில் தேவையான ஜர்தோஷி,  மெஷின் எம்ப்ராய்டரி, ஸ்டோன் டிசைன்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம்.

ரெடிமேடு பிளவுஸ் ரகங்களை பொருத்தவரை பின்பக்கமாக ப கழுத்து, வி கழுத்து, யூ கழுத்து, ஓ கழுத்து போன்ற டிசைன்களில் தயார் செய்கிறோம்.  இதுதவிர முன்புறம் கழுத்து மற்றும் கை பார்டரில், அழகான துணியை ஜாயின்ட் செய்தும், பஃப் வைத்த ஜாக்கெட்டாகவும் தயாரிக்கிறோம். இந்த ரக  ஜாக்கெட்டுகளுக்கு பெண்களிடம் செம வரவேற்பு உள்ளது. எம்ப்ராய்டரி பிளவுஸ் மட்டுமின்றி புடவை முந்தானையிலும் டிசைன்கள் செய்யலாம்.  எம்ப்ராய்டரி டிசைன், புடவை பிளவ்சோடு ஒட்டி கொண்டு இருப்பது போல் இருக்கும். ஆனால் எம்போசிங் மாடல் டிசைன்கள் 3 டி அனிமேசன்  போன்று பிளவுசுக்கு மேல்புறப்பகுதி வெளிப்படையாக தெரியும் வகையில் இருக்கும். 

அவை வெல்வெட், ஜர்தோசி, ஸ்டோன், எம்ப்ராய்டரி கோல்டன், த்ரெட் வைத்து பூ வேலைப்பாடுகள், மாங்காய் என பல்வேறு டிசைன் மற்றும்  வண்ணங்களில் தைக்கப்படுகிறது. இவ்வகை ரெடிமேடு பிளவுஸ்களின் விலை குறைவாகவே உள்ளதுடன், சரியான பிட்டிங்குகளில் கிடைப்பதால்  பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது. இவ்வாறு பிளவுஸ் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget