கர்ப்ப கால தொற்று நோய்கள் பற்றி தெரியுமா

கர்ப்ப காலத்தின் முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் வைரஸ் இன்ஃபெக்ஷன் தொற்றும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தொற்றில், ரூபெல்லா,
ஹெர்ப்பிஸ் எனப்படுகிற அக்கி, பொன்னுக்கு வீங்கி உள்பட பல அடக்கம். கர்ப்ப காலத்தின் முதல் மாதங்களில் இந்தத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு தீவிரமாக இருக்கும். 

அதாவது, நஞ்சைத் தாண்டி, அந்தத் தொற்றானது, குழந்தையின் ரத்தத்தில் கலந்து, குழந்தையின் உறுப்பு வளர்ச்சியை பாதிக்கும். அதுவே இந்தத் தொற்றானது இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனப்படுகிற இடைப்பட்ட கர்ப்ப காலத்தில் தாக்கினால் இவ்வளவு பாதிப்புகள் இருக்காது. 

நஞ்சைத் தாண்டி வைரஸானது குழந்தையை பாதிக்கிற தீவிரம் குறையும். கடைசி 3 மாதங்களில் மறுபடி தீவிரம் அதிகமாகும். இந்தத் தொற்று ஏற்பட்டால், கர்ப்பிணிகளுக்கு கருவே தங்காமல் போகலாம். அடிக்கடி கருக்கலையலாம். 

கருத்தரித்தாலும் வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்து போகலாம் அல்லது பிறந்த சில நாட்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்கலாம். குழந்தை பிறந்ததும், அதன் கேட்கும் திறனும், பார்வையும் பாதிக்கப்படும். மூளை வரை தொற்றானது தாக்கி, மூளை வளர்ச்சியை பாதித்து, வலிப்பு நோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது. 

எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சாதாரண காய்ச்சல், ஜலதோஷம், கழுத்து வீக்கத்தைக் கூட அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதன் தீவிரத்தைப் பொறுத்து, அந்தப் பெண் சில மாதங்கள் வரை கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவார். 

ஏற்கனவே கருத்தரித்தவர் என்றால் ஸ்கேன் செய்து, பாதிப்புக்கேற்ப சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை, சோதனைகளும், சிகிச்சைகளும் கணவன், மனைவி இருவருக்குமே அவசியம். இருவருக்கும் அது முழுமையாக செய்யப்பட்டால்தான், அந்தத் தொற்றையும், அதன் பாதிப்பையும் முற்றிலும் ஒழிக்க முடியும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget