போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆஷா சரத்

மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷியத்தில் வரும் பெண் போலீஸ் அதிகாரியின் கேரக்டர் முக்கியமானதாகும். மோகன்லால் குடும்பத்திற்கே
வில்லி அந்த கேரக்டர்தான். அதில் மலையாள நடிகை ஆஷா சரத் நடித்திருந்தார். அந்த கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. கன்னடத்தில் ரீமேக் ஆன த்ரிஷ்யத்திலும் அதே கேரக்டரில் ஆஷா சரத் நடித்தார். இரண்டு மொழிகளிலும் நடித்து அந்த கேரக்டரில் நன்றாக மோல்ட் ஆகிவிட்டதால் தமிழ் த்ரிஷ்யத்திலும் போலீஸ் அதிகாரி கீதா ஐ.பி.எஸ்சாக ஆஷா சரத்தே நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரே ஒரு கேரக்டர் ஒரு நடிகையின் கேரியரை மாற்றி அமைக்கும் என்பதற்கு நான்தான் உதாரணம். த்ரிஷ்யத்தில் நான் நடித்த ஐ.பி.எஸ் கேரக்டர் என்னை உயர்த்தி பிடித்தது. தமிழில் நன்கு மலையாளம் தெரிந்த கமல். மலையாளி ஜீது ஜோசப் இருப்பதால் தமிழும் எனக்கு எளிமையாக இருக்கும். அதிலும் கமலுடன் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. பெண் போலீஸ் அதிகாரியின் கணவராக கன்னடத்தில் பிரபு நடித்து வருகிறார். அவரே தமிழிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget