டூவீலர் ஓட்டும் பெண்கள் அறிய வேண்டியவை

நகரப்பகுதிகளில் வாகன நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நெருக்கடியில் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை
இயக்குவது பெரும் சவாலான விசயமாக மாறியுள்ளது. முன்னால் செல்பவருக்கு ஏற்ப வாகனங்களை இயக்க வேண்டிய கட்டாயம் நகரப்பகுதியில் உள்ளது. அதனால், ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, பெண்கள் மிகவும் கவனமாக டுவீலரை இயக்க வேண்டும். ஏனெனில் சிறு விபத்துகள் கூட பெரிய இழப்புகளில் கொண்டு போய் முடியும். அதற்கான சில ஆலோசனைகள் மட்டும் இங்கே..

தெருமுனை வருவதற்கு சிலஅடிகள் முன்பே பிரேக் பிடித்து நின்று திரும்ப வேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லை என்றாலும், இதனை கடைப்படிப்பது நல்லது. எந்த வாகனத்தையும் அவசரபட்டு முந்த வேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது அறவே கூடாது. எதிர் வாகனங்களை பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் தேவையெனில் முந்தலாம். பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்க கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் வண்டியை எடுப்பதே சிறந்தது. பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாக செல்வது உத்தமம்.

ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். பெண்கள் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்து கொண்டு நீளக் கையுறைகளுடன் செல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது. முடிந்தளவு இப்படி செல்வதை தவிர்க்கலாம். ஏனெனில், சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல் குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் நல்லது. வெயிலில் இருந்து சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது, பாட்டு கேட்டுக்கொண்டோ, போனில் பேசிக்கொண்டோ செல்லக்கூடாது. பக்க கண்ணாடிகளை பார்க்காமல் வண்டியை திருப்பவோ, நிறுத்தவோ, ரோட்டை கடக்கவோ கூடாது. வண்டியின் பிடியும் உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ அது ஓட்டும்போதும் பிரேக் பிடித்து நிறுத்தும் போதும் இருக்க வேண்டும். டுவீலரில் இரண்டு பேருக்கு மேல் செல்வதை கூடிய மட்டும் தவிர்க்கவும். காதலர்களோ அல்லது தம்பதியினரோ பிரச்னைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget