
இயக்குகிறார். அஸ்வின், நெடுஞ்சாலை ஷிவாகா, ஜே.டி.சக்ரவர்த்தி, துளசி நடிக்கிறார்கள். பாபுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் பிரசன்னா மியூசிக்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 வாரமாக பின்னி மில்லில் நடந்து வருகிறது. 20 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட வீடு செட் போட்டு படம் எடுத்து வருகிறார்கள். இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மகாபலிபுரத்தில் நடக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் வட மாநிலங்களில் நடக்கிறது.
படத்தை பற்றி இயக்குனர் அருண்குமார் கூறியதாவது: இந்த உலகத்தை இறைவன் படைத்தபோது அந்த படைப்பில் சில அமானுஷ்ய சக்திகளும் உருவானது. இறைவன் அதை தனது சக்தியால் அடக்கி வைத்தார். மனித இனம் என்றைக்கு நேர்வழியை விட்டு விலகிச் செல்கிறதோ அன்றைக்கு நீங்கள் விடுதலையாவீர்கள் என்று இறைவன் சொன்னதாக வேத நூல்கள் சொல்கின்றன. அப்படியான காலகட்டம் வந்துவிட்டதால் அமானுஷ்ய சக்திகள் உயிர் பெறுகின்றன. அப்படி ஒரு சக்தி புதிதாக திருமணமான ஷிவாதாவின் உடலுக்குள் புகுந்து என்ன செய்கிறது என்பதுதான் கதை. ஷிவாதா, அஸ்வினின் காதல் மனைவியாகவும் பயமுறுத்தும் அந்த அமானுஷ்ய சக்தியாகவும் நடிக்கிறார். என்றார்.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.