பெண்களை காக்கும் ஆயுதங்கள்

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்குமே இல்லை. தினம்தினம் பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, கொலை
உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படி பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்... நீங்கள் ஆட்டோவில் தனியாக பயணம் செய்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது நீங்கள் போக வேண்டிய பாதையில் போகாமல் ஆட்டோ டிரைவர் வேறு சாலையில் நுழையும் போது நீங்கள் அபாயத்தில் இருப்பதாக உணர்ந்தால் என்ன செய்வீர்கள்? . 

அப்போது பயப்படக்கூடாது. உங்களுடைய பணப்பையின் கைப்பிடியை உங்களது துப்பட்டாவில் முடிந்து கொள்ளுங்கள். அதனை அவனுடைய கழுத்தில் இறுக்கி பின்னால் தள்ளுங்கள். அவன் கண்டிப்பாக உதவியற்ற நிலைக்கு தள்ளப்படுவான். ஒருவேளை பர்ஸ் இல்லையென்றால் அவனுடைய காலரைப் பிடித்து இழுங்கள். 

அவனுடைய சட்டை காலர் பட்டனே அவனுக்கு எமனாக மாறிவிடும். இவ்வாறு திடீரென தாக்குதல் ஏற்பட்டால் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான் எதிராளியிடம் இருந்து உங்களை காத்துக்கொள்ள முடியும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget