மனித மனதை பைத்தியமாக்கும் காதல்

நீங்கள் காதலில் இருக்கும் போது காற்றில் மிதந்து கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் காதல் உங்களை சில காரியங்களை செய்ய வைக்கும்.
பைத்தியகாரத்தனமான முட்டாள்தனமான விஷயங்களை எல்லாம் செய்யவும் பேசவும் வைக்கும். 

ஏன் உங்களை பைத்தியமாக்கும் நிலைக்கு கூட தள்ளி விடும்.  ஒரு உறவில் ஆரம்ப கட்டத்திலேயே படுக்கைக்கு சென்றால், உங்கள் இருவருக்குமிடையே உள்ள இணைப்பை அது வெகுவாக பாதித்துவிடும். காதல் உங்களை முட்டாளாக காட்டும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். 

காதல் உங்களை எண்ணிலடங்கா தவறுகளையும், குற்றங்களையும் செய்ய வைத்து பின் அதற்காக மன்னிப்பு கேட்கவும் வைக்கும். உங்கள் பெற்றோர்களுக்கு உங்கள் காதலை பற்றி தெரியவில்லை என்றாலோ அல்லது உங்கள் காதல் மீது விருப்பம் இல்லை என்றாலோ, வீட்டை விட்டு ஓடி போக நினைப்பது காதலர்களின் வழக்கமாகும். 

காதலின் பேரை சொல்லி இப்படி ஓட வைக்கும் இந்த ஐடியா உங்களை முட்டாளாக காட்டும். தீய பழக்கங்களில் விழுவதற்கு காதல் தான் குற்றம் சாட்டப்படும். தீய பழக்கம் உள்ள ஆணை நீங்கள் காதலித்தால், உங்களுக்கும் குடி மற்றும் புகைப்பிடிக்கும் தீய பழக்கங்கள் ஒட்டிக் கொள்ளலாம். 

குருட்டுத்தனமான காதல் கூட உங்களை ஒரு வழியில் பைத்தியகாரத்தனமாக உணர வைக்கும். குருட்டுத்தனமான காதலை விரும்புபவர்கள் பலர் உள்ளனர். காதல் உங்களுக்கென ஒரு வாழ்க்கை உள்ளதென்பதை அது மறக்க வைக்கும். 

உங்களுக்கு குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு உங்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதையும் அது மறக்கடிக்கும். உங்கள் காதலனுக்காகவோ அல்லது காதலிக்காகவோ அளவுக்கு அதிகமாக செலவழித்து, பின் கடைசியில் காசு இல்லாமல் போகும் போது, அதற்காக வருந்துவது. இது தான் காதல் உங்களுக்கு தருவது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget