கோலிவுட் நாயகிகளை மிரள வைத்த கேத்ரின் தெரசா

அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின், அமலாபாலைத் தொடர்ந்து தற்போது கேரளத்தில் இருந்து வந்த நடிகைகள்
லட்சுமிமேனன் முன்னணி வகித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, இப்போது இன்னொரு கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவரும் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் கணிதன் என்ற படத்தில் கமிட்டான கேத்ரின் தெரசா, இப்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி-அஞ்சலி நடிக்கும் படத்திலும் இன்னொரு நாயகியாக கமிட்டாகியுள்ளார். ஆக, தமிழில் நடித்த முதல் படம் இன்னும் திரைக்கு வரும் முன்பே அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி விட்டார் கேத்ரின் தெரசா.

அதனால் இதுவரை கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வந்த கேத்ரின் தெரசாவுக்கு இப்போது தமிழ் சினிமா மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் தெலுங்கில் நடித்து வரும் ராணி ருத்ரம்மா தேவி படத்தை முடித்ததும் கோடம்பாக்கத்தில குடியேறி பட வேட்டையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, இப்படி வந்த வேகத்திலேயே கார்த்திக், அதர்வா, ஜெயம்ரவி என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக கேத்ரின் கைப்பற்றி விட்டதால், நயன்தாரா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளும், வளர்ந்து கொண்டிருக்கும் லட்சுமிமேனன் ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நடிகைகளும் இந்த நடிகையினால் தங்களுக்கு பாதிப்பு வருமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget