மலையாள முன்னணி நடிகை மஞ்சுவாரியர்

மலையாள திரையுலகில் 1995–ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சுவாரியர். 3 ஆண்டுகளில் 20–க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்து புகழ் பெற்றார். 1998–ம் ஆண்டு மலையாள படங்களில் கதாநாயகனாக வலம் வந்த நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடும்ப வாழ்க்கையில் நுழைந்ததும், நடிப்பை நிறுத்தி கொண்டார். மகள் மீனாட்சியுடன் சுமார் 15 ஆண்டுகள் இனிதாக சென்ற இல்லற வாழ்க்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் புயல் வீசியது. திலீப்பும், மஞ்சுவாரியரும் ஒரே வீட்டில் முகத்தை திருப்பிக் கொண்டு வாழ்ந்தனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், இருவரும் வேறு வேறு வீடுகளில் தங்கினர். மகள் மீனாட்சி தந்தை திலீப்புடன் இருந்தார். இந்த நிலையில்தான் இருவரும் விவாகரத்து கேட்டு திடீரென கொச்சி குடும்பநலக்கோர்ட்டில் மனு செய்தனர்.

மனுவை விசாரித்த கோர்ட்டு 2015 ஜனவரி 27–ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது. திலீப்–மஞ்சு வாரியர் விவாகரத்துக்கு காரணம் என்ன? அவர்களை பிரித்தது எது? என திரையுலகிலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன.

குறிப்பாக மஞ்சுவாரியரின் தோழிகளே அவரது விவாகரத்துக்கு காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில் தனது பிரிவுக்கான காரணம் என்ன? என்பதை மஞ்சுவாரியர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.

மலையாளத்தில் எழுதப்பட்ட அந்த கடிதம் 3 பக்கங்களுக்கு நீண்டு இருந்தது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:–

திலீப்பை பிரிந்தது எனது தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் என்னை நிர்ப்பந்திக்க வில்லை. திரையுலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் எனக்கு பலர் நண்பர்களாக இருந்தனர். குறிப்பாக கீத்து, சம்யுக்தா, பாவனா, பூர்ணிமா, சுவேதாமேனன் ஆகியோர் எனது நெருங்கிய தோழிகள்.

அடிக்கடி இவர்களிடம் பேசி வந்ததால் நான், திலீப்பை பிரிந்து சென்றதற்கு இவர்களும் காரணம் என்று செய்தி பரவி விட்டது. இது முற்றிலும் தவறான செய்தி. என் பிரிவுக்கு தோழிகள் காரணமல்ல. எனது பிரச்சினையில் தோழிகளை குற்றம் சொல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்களுக்கு வருத்தம் இருக்கும். வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்படும். இதற்காக நான் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மஞ்சுவாரியர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget