கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வலிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இந்த கர்ப்ப காலத்தில் தான் கடுமையான மூட்டு வலியையும்
பெண்கள் சந்திப்பார்கள். மூட்டு வலி மட்டுமின்றி, முதுகு வலியையும் பெண்கள் சந்திப்பார்கள்.

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து வேறுபடும். கர்ப்ப காலத்தில் மூட்டு வலி வருவதற்கான காரணங்கள் பார்க்கலாம்..

கர்ப்ப காலத்தில் இடுப்புத் தசை நாண்கள் மற்றும் தசைநார்களை ரிலாக்ஸ் செய்யும் ஹார்மோன்களானது வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படும் ஹார்மோன்களானது உடலின் மற்ற மூட்டுகளில் உள்ள தசைநாண்கள் மற்றும் தசைநார்களை தளர்வடையச் செய்வதால், மூட்டு வலிகள் ஏற்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகரிப்பதும் ஒரு காரணமாகும். உடல் எடை கர்ப்ப காலத்தில் அதிகரிப்பதால், இந்த வலியானது இடுப்பு, கால் மூட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் வரும். உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால், கீழே உட்கார்ந்து எழும் போது மணிக்கட்டில் அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் கடுமையான வலிக்கு உள்ளாகும்.

தூங்கும் நிலையினாலும் வலிகளானது ஏற்படக்கூடும். உதாரணமாக, இடது பக்கமாகவே இரவு முழுவதும் தூங்கினால், காலையில் எழும் போது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படக்கூடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget